காலஞ்சென்ற கல்வெட்டு ஆய்வாளரும் புலவருமான திரு.வெ.இரா.துரைசாமியின் மூன்றாவது நூலாக "பட்டணம் வரலாறு" நூல் கடந்த 26 நவம்பர் 2022 அன்று பட்டணம் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் உள்ள பட்டணம் என்ற ஊரின் வரலாற்றை புலவர் திரு.வெ.இரா.துரைசாமி சில ஆண்டுகளுக்கு முன் பல கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் உதவியுடன் ஆராய்ந்து “ஆலத்தூர்-பட்டணம் - சில வரலாற்றுக்குறிப்புகள்" என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதினார். இக்கட்டுரையை பட்டணத்தைச் சார்ந்த ஓய்வு பெற்ற முதுகலைத் தமிழாசிரியர் புலவர் திரு. இரா.கொடையரசன் அவர்கள் சிறப்பாகத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். அவருக்கும் இந்நூல் வெளியிட உதவிய அனைத்து அறிஞர் பெருமக்கள் மற்றும் பட்டணம் பொதுமக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
மிகச் சிறப்பு. வாழ்க அண்ணன் புகழ்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா!
நீக்கு