ஞாயிறு, 1 மே, 2022

தொன்மைப் பாதுகாப்பு மன்றத் தொடக்க விழா

அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி நாமகிரிப்பேட்டையில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் தொடக்கவிழா 17 ஆகஸ்டு 2017 அன்று நடைபெற்றது. இவ்விழாவினை தலைமையாசியை திருமதி. சு.அம்சவல்லி தலைமையேற்று நடத்தினார். பள்ளியின் தமிழாசிரியை திருமதி. வசந்தி மெய்யப்பன்  வரவேற்புரை நிகழ்த்தி நூலகத்தின் அவசியம் பற்றிப் பேசினார். திருமதி அ.ஸ்டெல்லாமேரி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்றத் தமிழாசிரியரும் கல்வெட்டு ஆய்வாளருமான புலவர் திரு, வெ.இரா.துரைசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொன்மையான இடங்களைப் பற்றியும், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மற்றும் நாணயங்கள் வாயிலாக கிடைக்கும் செய்திகளையும் மாணவிகளுக்கு எடுத்துரைத்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை விளக்கிப் பேசினார்.  மேலும் அவர் பள்ளி நூலகத்திற்கு சில நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். மன்றத்தின் செயலாளர் திருமதி க.கோகிலா நன்றியுரை கூறினார்.

ஓய்வு பெற்றத் தமிழாசிரியரும் கல்வெட்டு ஆய்வாளருமான புலவர் திரு, வெ.இரா.துரைசாமி அவர்கள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டு 17-ஆம் தேதி, நாமகிரிப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரை.