சித்திரைச் செல்வியே! முத்திரை பதித்திட
செந்தமிழ் நாட்டினி லே!
இத்தரை முழுவதும் நித்திரை நீங்கிட
எங்கும் மழை பொழிய!
செந்தமிழ் நாட்டினி லே!
இத்தரை முழுவதும் நித்திரை நீங்கிட
எங்கும் மழை பொழிய!
உத்தம உழவர்கள்! சத்திய வாழ்வினர்!
உயர்ந்திட அருள் வழங்கும்
சித்திரைச் செல்வியே! வித்தகக் கன்னியே!
சிறப்புடன் வந்திடுவாய்!
உயர்ந்திட அருள் வழங்கும்
சித்திரைச் செல்வியே! வித்தகக் கன்னியே!
சிறப்புடன் வந்திடுவாய்!
மங்கலம் பொங்கிட எங்கும் செழித்திட
வந்தருள் தந்திடுவாய்!
வெங்கனல் வீசியே! எங்களைக் காய்த்தது
இனியும் போதுமம்மா!
வந்தருள் தந்திடுவாய்!
வெங்கனல் வீசியே! எங்களைக் காய்த்தது
இனியும் போதுமம்மா!
பங்கயத் திருவடி தாங்கியே வாழ்த்துவோம்
பரிவுடன் புத்தாண்டில்!
எங்களைக் காத்திட வந்தருள் தாயே!
இனிய புத் தாண்டாக!
பரிவுடன் புத்தாண்டில்!
எங்களைக் காத்திட வந்தருள் தாயே!
இனிய புத் தாண்டாக!
- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)
(2017 ஹே விளம்பி புத்தாண்டிற்காக எழுதப்பட்டது)
(2017 ஹே விளம்பி புத்தாண்டிற்காக எழுதப்பட்டது)
நல்ல கவிதை!நல்ல புலமை!
பதிலளிநீக்கு